Friday, September 25, 2009

வெங்காயங்களால் வந்த வினை!!

தலைப்புக்கும் விசயத்துக்கும் என்ன சம்பந்தம் எண்டு யோசிக்காதயுங்கோ, வாசியுங்கோ தெரியும். ஒரு பட்டாம்பூச்சியின் அதிர்வுக்கும், பூகம்பத்துக்கும் தொடர்பு இருக்கு எண்டு 'கயாஸ்' தியரி சொல்லேக்க, என்னுடைய தலைப்புக்கும் விசயத்துக்கும் கூட தொடர்பு இருக்க தானே வேணும். ஆகவே மறுபடியும் சொல்லுறன் யோசிக்காதயுங்கோ, வாசியுங்கோ.

'cricket is a gentile man game ' எண்டதை நேற்றும் நிருபித்தார் இங்கிலாந்து அணித்தலைவர் Andrew Strauss. நேற்று நடந்த இங்கிலாந்து இலங்கை மேட்ச் பாத்தவர்களுக்கு தெரியும் நடந்தது. பாக்காதவைக்கு ஒரு சின்ன re-play.

இலங்கை அணி வீரர் Mathews எதிர்கொண்டது இங்கிலாந்து அணி வீரர் onions வீசிய பந்தை. பந்தை 'long on ' திசைக்கு அடித்துவிட்டு ஒரு ஓட்டத்தை எடுத்துவிட்டு மறு ஓட்டம் எடுக்க முற்படும் வேளையில் எதிரே வந்த பந்து வீச்சாளருடன்(Onions) மோதுண்ட காரணத்தால் runout ஆகவேண்டிய சந்தர்ப்பம். நடுவர்கள் கூடி ஆலோசித்து Mathews ஆட்டம் இழந்ததை உறுதி செய்தனர். Mathews மனமில்லாமல் மைதானத்தை விட்டு வெளியெறிவிட்டார். முரளி கூட உள்ளே இறங்க ஆயத்தமான வேளையில் உள்ளே இருந்து அழைப்பு. களத்ததுக்கு மீண்டும் அழைக்கப்பட்டார் Mathews. அழைத்தவர் நடுவர் என்றாலும், அழைக்க சொல்லி கட்டளை இட்டவர் இங்கிலாந்து அணித்தலைவர் Strauss. நடுவர் அறிவித்த தீர்ப்பை மாற்ற கூடிய அதிகாரம், அதாவது ஆட்டம் இழந்தாலும் மறுபடி கூப்பிடக்கொடிய அதிகாரம் எதிரணித்தலைவருக்கு மட்டுமே உண்டு. Mathews ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் சக வீரர்களுடன், குறிப்பாக Onions உடன் கலந்தாலோசித்த Strauss உடனடியாக Mathews ஐ கூப்பிடுமாறு நடுவர்களுக்கு அறிவித்தார். batting powerplay எடுக்க போகும் தறுவாயில் அரைச்சதம் கடந்த ஒரு வீரரை மீண்டும் அழைப்பது என்பது தற்கொலைக்கு சமன். என்றாலும் விளையாட்டை விளையாட்டாக மட்டும் கருதி Strauss அவரை மீண்டும் களத்ததுக்கு அழைத்தது ''cricket is a gentile man game ' தான் என்பதை எடுத்துக்காட்டியது. இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு வீரரை அதுவும் அரைச்சதம் கடந்து, நல்ல போர்மில் இருக்கும் ஒருவரை மீண்டும் அழைக்கும் மனநிலை இலங்கை அணித்தலைவர் சங்ககாரவுக்கோ, இல்லை அவுஸ்ரேலிய முன்னாள் தலைவர் பொன்டிக்குக்கோ, ஏன் இந்திய அணித்தலைவர் தோனிக்கோ வருமா என்பது சந்தேகமே.

என்றாலும் உள்ளே வந்த mathews வாய்ப்பை சரிவர பயன்படுத்தாமல் ஆட்டமிழந்தது இலங்கை அணிக்கு ஏமாற்றமே. போகும் போது நன்றி கூறிச்சென்ற mathews இக்கு பாரட்டத்தான் வேணும். இது எல்லாத்துக்கும் காரணம் வெங்காயங்கள் தான். என்ன விளங்கலையோ? அதன் Graham Onions ஐ தான் சொன்னான். onions எண்டால் தமிழ்ல வெங்காயங்கள் தானே. இந்த வெள்ளைக்கராங்களுக்கு பெயருக்கு பஞ்சம் போல. வெங்காயம், வெள்ளை, பிரவுன், மணி(bell ), கொல்லன்(smith ) எண்டு எல்லாம் பெயர் வைக்கிறாங்கள். வெளிநாடு வாழ் தமிழ் மக்களே!! நீங்கள் கண்டு பிடித்து வைக்கும் அந்த வாயில் நுழைய கஷ்டப்படும் பெயர்களை கொஞ்சம் வெள்ளைக்கராங்களுக்கும் சொல்லுங்கோவன். உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

இண்டைக்கு ஒரு நல்ல சண்டை, மனிக்கவும் மேட்ச் இருக்கு. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் செஞ்சூரியன் பார்க்ல! உலகிண்ண வரலாற்றில் ஒருதடவையும் பாகிஸ்தானிடம் தோல்வியடையாத இந்தியா இன்றும் அதை தக்க வைக்குமா, இல்லை இன்று வென்று சரித்திரத்தை மாற்றுமா பாகிஸ்தான் என்பதை பார்க்கும் ஆர்வம் உங்களைப்போல் எனக்கும் இருக்கிறது. நாளைக்கு சிங்கபூரில பார்முலா ஒன்(formula 1)கார் ரேஸ் வேற இருக்கு. பொழுது போக்குக்கு குறைவில்லை.

4 comments:

  1. நல்லதொரு தகவல்! நேற்று போட்டியை பார்க்க முடியாவிட்டாலும் நீங்கள் கூறிய விதத்தில் இருந்து என்ன நடந்திருக்கும் என ஊகிகக் முடிந்தது.

    ReplyDelete
  2. மிக சில சந்தர்ப்பங்களிலேயே இந்த மாதிரி பெருந்தன்மையான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது Strauss-ன் பெருந்தன்மை மட்டும் அல்ல. மனரீதியாக திரும்ப இதுமாதிரி 'கருணையினால்' வாய்ப்பளிக்கப் பட்ட ஆட்டக் காரர் ஒருமாதிரி சங்கட உணர்வினாலேயே சீக்கிரம் ஆட்டமிழக்கும் வாய்ப்பு உண்டு என்பதை Strauss உணர்ந்திருப்பார் போலும்! எனினும் பாராட்டப் பட வேண்டிய நாகரீகங்கள்.

    ReplyDelete
  3. http://kuzhanthainila.blogspot.com/

    சுதர்ஷன்,கடவுளுக்கு ஒரு கவிதை போட்டிருக்கிறன்.பாருங்கோ திட்டாம.

    ReplyDelete
  4. நன்றி ஸ்ரீராம்... நன்றி ஹேமா அக்கா. இந்தவாரம் நேரம் கிடைக்கவில்லை.. இண்டைக்கு தான் உங்கட பின்னூட்டம் பாக்கிறன். தாமத்துக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete