எனக்கொரு சந்தேகம் இருக்குது ...
நீங்கள் எல்லாம் இப்பிடி சந்தேகப் படுவீங்களோ எண்டு
எனக்கொரு சந்தேகம் இருக்குது ...
முதல்ல யார் சந்தேகத்துக்கு சந்தேகம் எண்டு
பெயர் வைச்சாங்கள் எண்டு பெரிய சந்தேகம்.....
சந்தேகத்துக்கான மூல காரணி என்னவேண்டும் சந்தேகம்
காரணம் இல்லாமல் சந்தேகப் பாடுவாங்களா எண்டு சந்தேகம்
இல்லை காரணத்தோடை தான் சந்தேகப் பாடுவாங்களா எண்டு சந்தேகம்
சந்தேகங்கள் வாறதால நன்மையா தீமையா எண்டு சந்தேகம்
நன்மை தான் கூட எண்டால் ஏன் சந்தேகப்படக்கூடாது எண்டு
நிறையப்பேர் சொல்லுறவை எண்டு சந்தேகம்
இல்லை தீமை தன் கூட எண்டு சொன்னால், அப்ப ஏன்
இப்பவும் ஆக்கள் சந்தேகப் பட்டுகொண்டிருக்கினம் எண்டு சந்தேகம்
சந்தேகத்துக்கும் சந்தோசத்துக்கும் எதாவது
தொடர்பு இருக்குதோ எண்டு சந்தேகம்
அப்பிடி தொடர்பு இருக்கும் எண்டால் அது நேர் விகித சமனோ
இல்லை நேர் மாறு விகித சமனோ எண்டு சந்தேகம்
இந்த சந்தேகம் எண்டதே இல்லாமல் இருந்திருந்தால்
உலகம் எப்பிடி இருந்திருக்கும் எண்டு சந்தேகம்
நான் இப்பிடி சந்தேகப்படுறதால நீங்கள் எல்லாம்
"இவன் ஒரு சந்தேகப் பிராணி" எண்டு சந்தேகிப்பிங்களோ
எண்டு அடி மனதில ஒரு சந்தேகம்
இப்பிடி பாக்கப் போனால் எனக்கு ஒரு சந்தேகம் மட்டும் இல்லை,
பல சந்தேகங்கள் உண்டு என்பதில சந்தேகமில்லை
இப்பிடி கணக்குவழக்கில்லாமல் சந்தேகப் பட்டால் எனக்கு
என்னவும் ஆகிடுமோ எண்டும் சந்தேகமா கிடக்கு
அப்பிடி என்னவும் ஆகினால் எண்ட நிலைமை என்னவாகும் எண்டு சந்தேகம்
இந்த சந்தேகங்களை எல்லாம் போக்க உங்கள் யாரவது
ஒருவரலாவது முடியுமா எண்டு சந்தேகம்
அப்பிடி ஒருவரால முடிஞ்ச தயவு செய்து
எனது சந்தேகங்களை தீர்த்து வைக்கவும்..
உங்களுக்கு எண்ட சந்தேகங்ளைப் பற்றி ஏதாவது
சந்தேகம் இருந்தால் தயங்காமல் என்னட்டை கேளுங்கோ
ஏன் எண்டால் நான் பட்ட சந்தேகங்களை நீங்களும்
படக்கூடாது பாருங்கோ...
Sunday, August 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
உந்தாள் சந்தேகத்தில சந்தேகம் பிடிச்ச ஆளாஎல்லே கிடக்கு.
ReplyDeleteஓட்டைப்பானை... நீங்களே சொல்லுங்கோ... நான் சந்தேகப்பட்டதில ஏதாவது பிழை இருக்கோ..
ReplyDeleteஒற்றைப்பனை,,,,தயவு செய்து என்னை மன்னிச்சு கொள்ளுங்கோ.. உந்த தமிங்கிலிசில இருந்தத வாசிக்கேக்க , பிழையா 'ஒற்றைப்பனை' எண்டத "ஓட்டைப்பானை" ஆக்கிப்போட்டன்... எண்டாலும்.. ஓட்டைப்பானை கூட நல்லாத்தான் இருக்கு என்ன..
ReplyDeleteசந்தேகமே இல்லை.....இது அதுதான்!
ReplyDeleteகதியால், நீர் என்ன புதுசா எனக்கு சந்தேகத்தை கிளப்பிவிடுறீர்?' இது அது தான்' என்கால் நான் எதை நினைக்கிறது.. அதை நினைப்பனோ? இல்லை இதை நினைப்பனோ? எதை தான் நினைப்பன் நான்.. ஏற்கனவே பல சந்தேகம்.. இதுக்க நீர் இப்பிடி சொன்னால்... என்ன நெனைச்சு சொன்னீர் எண்டு இப்ப பெரிய சந்தேகமா கிடக்கு..
ReplyDeleteஎனக்கு அந்த சந்தேகம் உண்டு ...
ReplyDeleteஐயோ ஜமால்... நீங்களும் குழப்ப கூடாது... தெரியும் தானே நான் ஏற்கனவே சந்தேகத்தில இருக்கிறன்.. நீங்களும் சந்தேகத்தில இருக்கப்படாது..
ReplyDeleteசுதர்ஷன்,வந்தேன்.ஓ...இங்க சந்தேகமோ !நான் நினைக்கவே இல்ல.
ReplyDeleteசுதர்ஷன் உங்கட அழகான பெயரை ஏன் தமிழில் போடாமல்...!தமிழில் எழுதுங்களேன்.
நன்றி ஹேமா, நீங்கள் எரிச்சல் படேக்க நான் சந்தேகப்படக்கூடதோ?? எல்லாம் ஒரு விரக்தியில எழுதினது தான்..
ReplyDeleteநான் 'gmail' account ஐ பவிக்கிறதால அது அப்பிடியே ஆங்கிலத்தில வருது.. அதுக்காக நான் ஒரு ஆங்கில வெறியனோ அல்லது தமிழில் எழுதுவதை தரக்குறைவாக என்னுபவனூ எண்டு நினைக்க வேண்டாம்..