நினைவில் மறந்த
என் ஊருக்கு
நீண்ட நாட்களின் பின்
என் பயணம்
புழுதி படிந்த பாதை
என் ஊருக்கு
வழி காட்டியது
தெருவோரம்
படுத்திருந்த நாய்
மௌனத்தால்
அமைதி காத்தது
வரும் காலம் என்னை
புது முகமாய்ப் பார்த்தது
விழுது பரப்பிய
ஆலமரம் மட்டும்
அறிமுகமாய் சலசலத்தது
அகல விரிந்த
கல்லறைகள்
நிறைந்த வெளி
என் உறவுகளின்
இருப்பிடம் அது
என்பதை உணர்த்தியது.
அறிமுகமானவர்களை
தேடினேன் எவரும் இல்லை
அறிமுகத்துக்காகத் தேடினேன்
அதற்கும் யாரும் இல்லை
என் ஊருக்குள்
தடம் பதித்த என்
காலச் சுவடுகள்
காற்றால்
அழிக்கப் பட்டுக்கெண்டிருந்தன
குருதி படிந்து என்
நிலம் மட்டும்
நிறம் மாறி இருந்தது
என்னை அடையாளம் காண
எவரும் இருக்கவில்லை
தனிமையில் என் கால்கள்
ஊருக்கு விடை கெடுத்தன
ஊர் எல்லையில் சலசலத்த
ஆலமரம் மட்டும்
என் கால்களைத்
தடுத்தது நான் வந்த
பாதை மட்டும் அமைதியாய்
உறங்கிக் கெண்டிருந்தது
விம்மிய மனம் ஊருக்கு
விடை கெடுத்தது
பயணத்தின் இடையில்
வழி மறித்தது ஒரு கை
அடையாளத்துக்காய்
முகம் நோக்கினேன்.
தழும்புகள் அடையாளம்
மறைத்தது சிரிப்பு மட்டும்
என் இளமைக் காலத்தை
நினைவூட்டியது
குரல் அடையாளம் காட்டியது
அவன் என் நன்பன்
மீண்டும் என் இளமை
எனக்குச் சொந்தமனது
Wednesday, August 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
உங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்
ReplyDelete