லெக்சரர் (lecturer) வாறதே 10:10 இக்கு தான்
பெடியள் பெட்டையள் வந்துசேர
பத்தரைக்கு மேலயாகும்.
ஆனா 9:50 இக்கு எல்லாம்
நான் வகுப்பறையில் ஆஜர்
ஏன் எண்டு கேட்டல்,
பாவம் தனிமையில் இருக்கும்
வகுப்பறை எண்டு....
மத்தியானம் கான்டீனுக்கு போனா,
எல்லா மேசையும் சோடி, சோடியாய்
நிறைஞ்சிருக்கும்...
தட்டுக்குள்ள எட்டிப் பார்த்தால்,
கரண்டி முள்ளுக்கரண்டியால....
கோழியையும், மாட்டையும்
மறுபடி போட்டு சாகடிச்சுக்
கொண்டிருப்பாங்கள்...
எனக்கு பாக்க பாவமாயிருக்கும்!!
பாவம் செத்தும் இதுகளை சனம்
நிம்மதியாய் இருக்க
விடுகுதில்லையே எண்டு....
மாலையானாக் காணும்,
மன்ஸஸ்டாருக்கும், லிவர்பூலுக்கும்
மேட்ச் நடக்குதெண்டு
மாஞ்சு மாஞ்சு பாப்பாங்கள்....
எனக்கு பந்தைப்பாத்தால்
பரிதாபமாக இருக்கும்
எங்களை இந்த உலகம் சேர்ந்துநிண்டு
உதைக்கிறதைபோல,
அதையும் கன கனவான்கள்
போட்டு உதைக்கிறாங்கலே....
அம்மா சீரியல் பாக்கேக்க
அடம்பிடிச்சு சனல் மாத்திபபாத்த
கிரிக்கட்டை கூட பாக்க விருப்பமில்லை
சேவாக் பந்தை சிக்ஸ்சருக்கு அடிக்கேக்க
எண்ட மனம் பதைபதைக்குது,
இந்தப் பந்து மாதிரி தான் எங்களையும்
பூமிப் பந்தில இருந்து தூக்கி எறிஞ்சிடுவங்களோ எண்டு....
சரி இரவாச்சு படுப்பமேண்டு
கண் மூடித் தூங்கினாலும்
கண்றாவி இந்தக் கனவு கூட
விடுகுதில்லையே!!!!!!!!!!!!
உலகம் அறியுமோ எம்மன ஆவலை??
தக்கைகள் அறியுமோ நீரின் ஆழத்தை????
//...எங்களை இந்த உலகம் சேர்ந்துநிண்டு
ReplyDeleteஉதைக்கிறதைபோல,
அதையும் கன கனவான்கள்
போட்டு உதைக்கிறாங்கலே......//
அருமை....அருமை....தொடரட்டும் சுதர்ஷன்...! வாழ்த்துக்கள்