Thursday, December 17, 2009
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.
Friday, September 25, 2009
வெங்காயங்களால் வந்த வினை!!
'cricket is a gentile man game ' எண்டதை நேற்றும் நிருபித்தார் இங்கிலாந்து அணித்தலைவர் Andrew Strauss. நேற்று நடந்த இங்கிலாந்து இலங்கை மேட்ச் பாத்தவர்களுக்கு தெரியும் நடந்தது. பாக்காதவைக்கு ஒரு சின்ன re-play.
என்றாலும் உள்ளே வந்த mathews வாய்ப்பை சரிவர பயன்படுத்தாமல் ஆட்டமிழந்தது இலங்கை அணிக்கு ஏமாற்றமே. போகும் போது நன்றி கூறிச்சென்ற mathews இக்கு பாரட்டத்தான் வேணும். இது எல்லாத்துக்கும் காரணம் வெங்காயங்கள் தான். என்ன விளங்கலையோ? அதன் Graham Onions ஐ தான் சொன்னான். onions எண்டால் தமிழ்ல வெங்காயங்கள் தானே. இந்த வெள்ளைக்கராங்களுக்கு பெயருக்கு பஞ்சம் போல. வெங்காயம், வெள்ளை, பிரவுன், மணி(bell ), கொல்லன்(smith ) எண்டு எல்லாம் பெயர் வைக்கிறாங்கள். வெளிநாடு வாழ் தமிழ் மக்களே!! நீங்கள் கண்டு பிடித்து வைக்கும் அந்த வாயில் நுழைய கஷ்டப்படும் பெயர்களை கொஞ்சம் வெள்ளைக்கராங்களுக்கும் சொல்லுங்கோவன். உங்களுக்கு புண்ணியமாப் போகும்.
இண்டைக்கு ஒரு நல்ல சண்டை, மனிக்கவும் மேட்ச் இருக்கு. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் செஞ்சூரியன் பார்க்ல! உலகிண்ண வரலாற்றில் ஒருதடவையும் பாகிஸ்தானிடம் தோல்வியடையாத இந்தியா இன்றும் அதை தக்க வைக்குமா, இல்லை இன்று வென்று சரித்திரத்தை மாற்றுமா பாகிஸ்தான் என்பதை பார்க்கும் ஆர்வம் உங்களைப்போல் எனக்கும் இருக்கிறது. நாளைக்கு சிங்கபூரில பார்முலா ஒன்(formula 1)கார் ரேஸ் வேற இருக்கு. பொழுது போக்குக்கு குறைவில்லை.
Saturday, September 19, 2009
உன்னைப்போல் ஒருவன் - நமக்கு வேண்டும்
தமிழ் நாட்டில் ஆங்காங்கே குண்டு வைத்துவிட்டு, நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க கேட்கிறார் கமல். போலிஸ் தீவிரவாதிகளை விட்டாதா?, விடுபட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நீங்கள் திரையில் தான் காணவேண்டும். போலிஸ் கமிஷனராக வரும் மோகன்லால் கமலுக்கு போட்டியாக நடித்திருக்கிறார். தான் ஒரு கேரளா மாநிலத்தவன் என்பதை சொல்லிடிகாட்டுவதில் என்ன அவசியம் வேண்டியிருக்கிறது என்று தெரியவில்லை. மலையாளம் கலந்த தமிழ் அழகாகத்தான் இருக்கிறது. கூடவே வரும் இரண்டு பொலிஸ்காரர்களும் பின்னி பிடலுடுக்கிறார்கள். குறிப்பாக கணேஷ் வெங்கட்ராமன் தமிழ் சினிமாவில் அக்சன் ஹீரோகளுக்கு ஒரு ஆப்பு வைக்கலாம், வைக்காமலும் போகலாம். அதிகார மட்டங்களுக்கிடையே நடக்கும் சம்பாசனைகள் மிகவும் கூர்மையானவை. லக்ஷ்மிக்கு மோகன்லால் சொல்லும் பதில்கள் அருமை. அதற்காக இரா. முருகனுக்கு ஒரு 'சபாஷ்' சொல்லலாம். படம் முழுக்க கிளோஸ்அப் காட்சிகள். முதல்வர் என்று டம்மி பீசைக்காட்டாமல், நிஜ முதல்வரின் குரலை பாவித்தது நல்ல முயற்சி. முதல்வரின் வீட்டிலும் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
கடைசியில் கமல் கொடுக்கும் கொள்கை விளக்கவுரையில் காட்டும் உணர்ச்சிகள் ஏராளம். சோகம், இயலாமை, ஏக்கம், தவிப்பு, அழுகை என்று அத்தனையையும் காட்டி இறுதியில் நின்று, நிதானித்து கண்டிப்புடன் கூறும் அழகே தனி. "தீவிரவாதி என்று மிரட்டினால் பயத்துடன் கேட்கும் நீங்கள்(போலிஸ்), நான் ஒரு சாதரணன் என்று தெரிந்தவுடன் குரலை ஏற்றுகிறீர்கள், நானும் ஒரு தீவிரவாதி தான். தீவிரவாதத்தை ஒழிக்கும் தீவிரவாதி" என்ற வசனங்கள் பிரமாதம். தனது பெயர் வாக்காளர் அட்டையில் இல்லாமல் போனதையும் நாசூக்காக குறிப்பிட தவறவில்லை கமல். இரா. முருகனின் வசனங்கள் அருமை. பின்னணி இசைக்கும் ஒரு 'ஓ' போடலாம். சில இடங்களில் பின்னணி இசை மௌனித்திருபதும் அற்புதம். படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் உண்டு என்றாலும் கதைக்கு பொருந்துகிறது.
இந்த மாதிரியான படங்கள் வருவது இதுதான் முதல்தடவை அல்ல. ஆனாலும் வந்த படங்களுக்கு நடந்த சம்பவங்களை நாடறியும். உதாரணம், எவனோ ஒருவன். அவ்வாறு இந்தப்படமும் போகமல் இருப்பது ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது. கலைஞர்களின் ரசிப்புத்திறமை எப்போது ரசிகர்களுக்கு வருகிறதோ அன்று தான் இந்த மாதிரியான முயற்சிகள் வெற்றியீட்டும் என்பது எனது எண்ணம். உன்னைப்போல் ஒருவன் -New face of terror.
உன்னைப்போல் ஒருவன்- எனது பார்வையில்.
உன்னைப்போல் ஒருவனும் அந்த வகையிலேயே வருகிறது. படத்தின் கதையை நான் இங்கே சொல்லுவது எழுத்துலக தர்மம் ஆகாது. கோடிகளை கொட்டி எடுத்த அந்த திரைக்காவியத்தை நீங்கள் திரையில் கண்டுகளிப்பதே நல்ல சினிமாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு. ஆயினும் படத்தில் வரும் சுவாரசியமான சில சம்பவங்களை பகிர்வது ஒன்றும் பெரிய குற்றமில்லை என்று கருதுவதால் இங்கே சில விடயங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.
கமலின் பெயர் வாக்காளர் அட்டையில் இல்லாமல் போனதை இங்கே நாசூக்காக சொல்லியிருப்பார். தன்னை 'common man' என்று சொல்லிக்கொள்ளும் கமலை மோகன்லால் கேட்பார் 'நீ என்ன கமான் மானா? இல்லை சுப்பர் மானா? (are you a 'common man' or superman?)என்று ' அதற்கு கமல் 'இல்லை நான் இன்விசிபிள் மான்(invisible man)' என்று சொல்லுவார். வாக்காளர் அட்டையில் பெயரில்லாத ஒருவன் இன்விசிபிள் மான் தானே என்று கேட்பார். அதில் அர்த்தம் இருக்கிறது. அதேபோல இன்னும் ஒரு காட்சியில் மோகன்லாலும், முதல்வரும் பேசிக்கொள்ளும் போது, மோகன்லால் சொல்லுவர், "எல்லாம் கடவுள் கையில்தான் உண்டு"(every thing is in god's hand) என்று. அதற்கு முதல்வர், "அது சிக்கலான கையாச்சே" என்று பதிலுரைப்பார். காலம் காலமாக கமல் தனது படங்களில் முன்வைக்கும் நாத்திக கருத்தின் வெளிப்பாடே இந்த வசனம்.
தமிழ் சினிமாவின் அடிப்படை விதிகளை மீறி தைரியமாக கமல் கொடுத்திருக்கும் ஒரு படமாகவே இதை காண்கின்றேன். நான்கு பாடல், இரண்டு சண்டைக்காட்சி, கிளாமர் ஹீரோயின் என்ற போர்முலாவை தாண்டி, கதாநாயகி இல்லாமல், படத்தில் வரும் எல்லோருக்கும் சம அளவு கனத்தை கொடுத்திருகிறார். தன்னை பின்நிலைப்படுத்தி சக பாத்திரங்களைக்கொண்டு கதையை நகர்த்தியிருப்பது தமிழ் சினிமாவுக்கு புதியது. அதேபோல பாடல் காட்சிகள் இல்லாமல் பயணித்திருப்பதும் நன்றாக உள்ளது(உண்மையில் இந்தபடத்துக்கு பாடல் காட்சிகள் வைக்கமுடியாது). சரித்திரத்தை திரும்பிப்பார்தால், தமிழ் சினிமா ரசிகர்கள் இம்மாதிரியான முயற்சிகளுக்கு காட்டிய/ கொடுத்த ஆதரவு குறைவு என்றே சொல்லலாம். எனினும் கமலின் இந்த முயற்சி வெற்றியளிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. ஒட்டுமொத்த சமூகமும் உணர்ந்து திருந்தினாலன்றி தனியொரு மனிதன் திருந்திப்பயனில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து.
Thursday, September 10, 2009
A9 வீதியால் போய் இருப்பாரோ மனுஷ்யபுத்திரன்?
Saturday, September 5, 2009
அவளா? நானா??
இண்டைக்கு காலம (காலையில) 'வாயு புத்திரனின்' ஒரு மாதிரியான பக்கத்தை வாசிச்சுகொண்டிருந்தன். "ஒரு மாதிரியான பக்கம்" எண்டவுடன நீங்கள் தப்பா நெனைக்க கூடாது.. அது அவர் எழுதிற பதிவு.அவருடைய யாழ் கொழும்பு பிரயாணத்தை பத்தி தன்னுடைய நகைச்சுவை கலந்த பாணியில எழுதியிருந்தார். நல்ல இருந்திச்சு. இப்ப விஷயம் அதில்ல. அவர் சொன்ன விஷயம் ஒண்டு எண்ட மனசில பதிஞ்சிருந்தது. அதாவது கொழும்பில இருந்து யாழ்ப்பாணம் போட்டு திரும்ப வாறத்துக்கு விமானத்தில டிக்கட் எடுத்தால் ஒரு மாச சம்பளம் கரைஞ்சு போகும் எண்டு கவலைப் பட்டு கொண்டிருந்தார். அது எண்டால் உண்மை தான். அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்யவும் முடியாது. இந்த விமான கட்டணம் தொடர்பாக பாரளுமன்றத்தில கூட கதைச்சவையாம். அங்க கதைச்ச ஒரு எம்.பி. ஒராள் சொன்னாரம் கொழும்பில இருந்து சென்னைக்கு போட்டு வாறத்துக்கு 12000 காணும், ஆனா உங்க பக்கத்தில இருக்கிற யாழ்ப்பாணம் போட்டு வாறத்துக்கு 25000 வேணுமாக் கிடக்கு எண்டு. அந்த மனிசன் சொன்னதில தப்பில்ல. ஆனால் யாருக்கு சொன்னது எண்டது தான் பிழை. எங்கட அரசாங்கத்தை பத்தி தெரியும் தானே. காசை குறைக்க மாட்டினம். பதிலுக்கு சென்னைக்கு போட்டு வாறத்துக்கு இருக்கிற காசை கூட்டி போட்டு சொல்லுவினம், இப்ப பாருன்கோ, சென்னைக்கு போட்டு வர 40000 , யாழ்ப்பாணம் போட்டு வர ஆக 25000 தானே எண்டு. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி எண்ட கணக்கா போடும்
Sunday, August 30, 2009
இப்பிடியும் மனிசன் சந்தேகப்படுவானோ
நீங்கள் எல்லாம் இப்பிடி சந்தேகப் படுவீங்களோ எண்டு
எனக்கொரு சந்தேகம் இருக்குது ...
முதல்ல யார் சந்தேகத்துக்கு சந்தேகம் எண்டு
பெயர் வைச்சாங்கள் எண்டு பெரிய சந்தேகம்.....
சந்தேகத்துக்கான மூல காரணி என்னவேண்டும் சந்தேகம்
காரணம் இல்லாமல் சந்தேகப் பாடுவாங்களா எண்டு சந்தேகம்
இல்லை காரணத்தோடை தான் சந்தேகப் பாடுவாங்களா எண்டு சந்தேகம்
சந்தேகங்கள் வாறதால நன்மையா தீமையா எண்டு சந்தேகம்
நன்மை தான் கூட எண்டால் ஏன் சந்தேகப்படக்கூடாது எண்டு
நிறையப்பேர் சொல்லுறவை எண்டு சந்தேகம்
இல்லை தீமை தன் கூட எண்டு சொன்னால், அப்ப ஏன்
இப்பவும் ஆக்கள் சந்தேகப் பட்டுகொண்டிருக்கினம் எண்டு சந்தேகம்
சந்தேகத்துக்கும் சந்தோசத்துக்கும் எதாவது
தொடர்பு இருக்குதோ எண்டு சந்தேகம்
அப்பிடி தொடர்பு இருக்கும் எண்டால் அது நேர் விகித சமனோ
இல்லை நேர் மாறு விகித சமனோ எண்டு சந்தேகம்
இந்த சந்தேகம் எண்டதே இல்லாமல் இருந்திருந்தால்
உலகம் எப்பிடி இருந்திருக்கும் எண்டு சந்தேகம்
நான் இப்பிடி சந்தேகப்படுறதால நீங்கள் எல்லாம்
"இவன் ஒரு சந்தேகப் பிராணி" எண்டு சந்தேகிப்பிங்களோ
எண்டு அடி மனதில ஒரு சந்தேகம்
இப்பிடி பாக்கப் போனால் எனக்கு ஒரு சந்தேகம் மட்டும் இல்லை,
பல சந்தேகங்கள் உண்டு என்பதில சந்தேகமில்லை
இப்பிடி கணக்குவழக்கில்லாமல் சந்தேகப் பட்டால் எனக்கு
என்னவும் ஆகிடுமோ எண்டும் சந்தேகமா கிடக்கு
அப்பிடி என்னவும் ஆகினால் எண்ட நிலைமை என்னவாகும் எண்டு சந்தேகம்
இந்த சந்தேகங்களை எல்லாம் போக்க உங்கள் யாரவது
ஒருவரலாவது முடியுமா எண்டு சந்தேகம்
அப்பிடி ஒருவரால முடிஞ்ச தயவு செய்து
எனது சந்தேகங்களை தீர்த்து வைக்கவும்..
உங்களுக்கு எண்ட சந்தேகங்ளைப் பற்றி ஏதாவது
சந்தேகம் இருந்தால் தயங்காமல் என்னட்டை கேளுங்கோ
ஏன் எண்டால் நான் பட்ட சந்தேகங்களை நீங்களும்
படக்கூடாது பாருங்கோ...
Friday, August 28, 2009
மதம் என்னும் மதம் ஓயட்டும்
மதம், உலகில் உள்ள சகல மக்களாலும் அறியப்பட்ட ஒரு பொதுச் சொல். மனித இனத்தின் தோற்றம் தொட்டே வழிபாடு எனும் ஒரு செயலும் இருந்து வருகின்றது என்பதை பண்டைய ஆய்வுகளின் மூலமாக அறிய முடிகின்றது. ஆதி காலத்தில் இயற்கையின் சீற்றத்திற்கு அஞ்சிய மனிதன் அதை தன்னிலும் மேலான ஒரு சக்தியாகக் கருதி வழிபடத்தொடங்கினான். ஆக ஒரு வித பயவுணர்வின் காரணமாக தன்னை பாதுகாத்து கொள்ளும் முகமாக இயற்கைச் சக்திகளான மழை, இடி, மின்னல், நெருப்பு, காற்று ஆகியவற்றை கடவுளாக உருவகித்து வழிபட்டு வந்தான். நாகரீக வளர்ச்சிக்கு இணங்க அவனின் வழிபாட்டிலும் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. அருவ வழிபாடு உருவ வழிபாடாக தோற்றம் பெற்றது. கடவுள்கள் தோற்றம் பெற்றனர். தங்களை காக்கும் சக்தியாக உருவகித்து அவர்களுக்கு உருவம் ஒன்றை கற்பனை செய்து வழிபடத்தொடங்கினான். இதுவே மதம் என்ற ஒன்றின் ஆரம்ப கட்டமாகும். இதுவே இந்து மதம் என்று அறியப்படுகின்றது.
இவ்வாறு தோற்றம் பெற்ற இந்து மதத்தில் காலப்போக்கில் பல பிளவுகள் ஏற்பட்டன. சைவம், வைஷ்ணவம், காணபத்தியம், கெளமாரம், செளரம், சாக்த்தம் என்று ஆறு சமயங்களாக பிளவு பட்டன. இந்த சமயங்களினிடையே பல்வேறுபட்ட பிரச்சினைகள் நடந்தமைக்கான ஆதாரங்கள் இன்றும் உள்ளன. உதாரணத்திற்கு சிவனை கடவுளாக கொண்ட சைவமும், விஷ்ணுவை கடவுளாக கொண்ட வைஷ்ணவமும் தமக்குள் மோதிக்கொண்டதாக கூறப்படும் சம்பவங்களை பழைய இதிகாசங்கள் மற்றும் புரானம்கள் வாயிலாக அறியமுடிகின்றது.
இது போக, இந்தப் பிரிவு போதாது என்று இந்து மதத்திலே குறைகள் உள்ளன, அவை மக்களை சரியான வழியில் வழிநடத்தவில்லை என்று கூறிக்கொண்டு பௌத்தமும், அதுவும் சரியில்லை என யூதமும், அதிலும் குறை என்று கிறீஸ்தவமும், அதுகூட முழுமை இல்லையெனக் கூறிக்கொண்டு இஸ்லாமுமாக இன்று பல்வேறுபட்ட மதங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இந்த எல்லா மதங்களினதும் குறிக்கோள் எமது சக்திக்கு அப்பாற்பட்டதாக கருதப்படும் கடவுளை அடைவதற்கான வழியை காட்டுவதே என்று சொல்லப்படுகிறது. கடவுள் என்று சொல்லுமிடத்து, எம்மால் அறியப்படமுடியாத, எமது சக்தியை மிஞ்சிய ஒரு சக்தியையே குறிக்கின்றது. அவ்வாறு எம்மிலும் விஞ்சிய ஒரு சக்தி உண்டென ஒப்புக்கொள்ளுமிடத்து, அது ஒரு கடவுளாக மட்டும் இருக்கமுடியுமே அன்றி கடவுள்கள் என பன்மையாக இருப்பது சாத்தியம் அற்றதாகின்றது. இவ்வாறன ஒரு முடிவுக்கு நாங்கள் வரும்போது, மேற்கூறியதை போன்ற பல்வேறுபட்ட மதங்களும்; சிவன், விஷ்ணு, இயேசு, அல்லா, புத்தன் என்னும் பல்வேறுபட்ட கடவுள்களும் இருப்பதாக சித்தரிக்கப்படும் விதம் பகுத்தறிவு கொண்ட எமக்கு ஒரு நம்பகமில்லத்தன்மையையே தோற்றுவிக்கின்றது.
நான் இங்கு கடவுள் என்று ஒருவர் இருக்கின்றாரா இல்லையா என்று வாதிட வரவில்லை. எம்மில் பெரும்பான்மையான மக்களால் நம்பப்படும் அந்த கடவுளின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை பற்றியே வாதிட வருகின்றேன். இன்று உலகில் நடைபெறும் கொலைகள் வன்முறைகளில் 80 சதவிகிதமான பங்கு கொலைகள் மதத்தின் பெயராலேயே நிறைவேற்றப்படுகின்றன எனது வருத்தத்திற்குரிய விடயமாகும். கிறீஸ்தவமும் இஸ்லாமும், இஸ்லாமும் இந்துவும் மூதிக்கொண்டதற்கான சாட்சிகள் நிறையவே உள்ளன. மும்பை கலவரம், குஜராத் கலவரம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அல்லாவுக்கு இருந்த கோயிலை இடித்துவிட்டு அதிலே ராமருக்கு குயில் கட்டுவதில் என்ன தர்மம் இருக்கின்றதோ தெரியவில்லை. பலஸ்தீனமும், இஸ்ரேலும் இன்றும் முட்டி மோதிக்கொள்ளும் சூட்சுமமும் இந்த மதமே என்பது அனைவரும் அறிந்த இரகசியம். இந்த மதவாதங்கள் சம்பந்தமாக பல திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன, வந்த வண்ணமும் உள்ளன.
அண்மையில் வெளிவந்தது 'ஆஸ்கார்' விருதை வென்ற "Slumdog Millionaire" என்ற படத்தில் ஒரு வசனம் வரும்.கதாநாயகனால் சொல்லப்படும் அந்த வசனம் இதுவே "If it wasn't Raaman and Allah we still have our mother". அதன் அர்த்தம் யாதெனில், ராமனும் அல்லாவும் இல்லாமல் இருந்திருந்தால் என் தாய் இன்றும் உயிரோடு இருந்திருப்பாள் என்பதேயாகும். மதத்தின் மதத்தை எவ்வளவு எளிமையாக சொல்லப்படுகின்றது. அந்த ஒரு வரி விடயம் எம்முள் ஆயிரம் கேள்விகள் எழுப்புகின்றது என்பதில் ஐயமில்லை. உலகில் உள்ள சகல ஜீவராசிகளிடமிருந்தும் வேறுபட்டு உன்னதமான நிலையில் உள்ள, சிந்திக்கும் ஆற்றல் உள்ள, பகுத்தறிவுள்ள மனிதன் இன்னும் மதம் என்னும் அறியாமையில் மூழ்கி நடாத்திக்கொண்டிருக்கும் வன்முறைகளையும் பார்க்குமிடத்து நாங்கள் வெட்கித்தலை குனியவேண்டி இருக்கின்றது. எம்மை விட அறியு குறைந்த விலங்குகளுக்கு இப்படி மதங்கள் என்ற கோட்பாடுகள் இருக்குமா என்று ஆராயுமிடத்து, அவ்வாறு இல்லையென்றே சொல்லமுடிகிறது. அதனால் தான் அவை தமக்குள் தாமே மூதிக்கொல்லாமல் இருக்கின்றனவோ என்ற ஐயம் எம்மனதில் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது.
இவ்வாறு எங்களை குழப்புகின்ற சந்தேகங்களுக்கு விடை காண முற்படும்போது, நாங்கள் இந்த பூமியிலே பிறந்ததன் நோக்கம் என்ன என்று அறிய முற்படும்போது, சேவை என்ற ஒரு வார்த்தை நமக்கு தென்படுகின்றது. இதையே மறைந்த அன்னை தெரேசாவும், மறைந்த இளவரசி டயானாவும் எமக்கு சொல்லிவிட்டு சென்றார்கள். மதம் என்ற ஒரு சிறிய போர்வைக்குள் சிக்காமல், அதை விட்டு வெளியே வந்து, மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்து, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் மனோபாவத்தை வார்ப்போம் என்று உறுதி பூணுவோம். இந்த சந்தர்ப்பத்திலே சுவாமி விவேகானந்தர் கூறிய ஒரு கூற்றை நான் மீட்டிப்பார்க்க விரும்புகின்றேன். "நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறேன், கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். அவ்வாறே முகமதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அதுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான்.நமது இந்தச் சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய இறைவன் அருள்புரிவான் என்று நம்புகிறேன்."
Thursday, August 27, 2009
தக்கைகள் அறியுமோ நீரின் ஆழத்தை????
லெக்சரர் (lecturer) வாறதே 10:10 இக்கு தான்
பெடியள் பெட்டையள் வந்துசேர
பத்தரைக்கு மேலயாகும்.
ஆனா 9:50 இக்கு எல்லாம்
நான் வகுப்பறையில் ஆஜர்
ஏன் எண்டு கேட்டல்,
பாவம் தனிமையில் இருக்கும்
வகுப்பறை எண்டு....
மத்தியானம் கான்டீனுக்கு போனா,
எல்லா மேசையும் சோடி, சோடியாய்
நிறைஞ்சிருக்கும்...
தட்டுக்குள்ள எட்டிப் பார்த்தால்,
கரண்டி முள்ளுக்கரண்டியால....
கோழியையும், மாட்டையும்
மறுபடி போட்டு சாகடிச்சுக்
கொண்டிருப்பாங்கள்...
எனக்கு பாக்க பாவமாயிருக்கும்!!
பாவம் செத்தும் இதுகளை சனம்
நிம்மதியாய் இருக்க
விடுகுதில்லையே எண்டு....
மாலையானாக் காணும்,
மன்ஸஸ்டாருக்கும், லிவர்பூலுக்கும்
மேட்ச் நடக்குதெண்டு
மாஞ்சு மாஞ்சு பாப்பாங்கள்....
எனக்கு பந்தைப்பாத்தால்
பரிதாபமாக இருக்கும்
எங்களை இந்த உலகம் சேர்ந்துநிண்டு
உதைக்கிறதைபோல,
அதையும் கன கனவான்கள்
போட்டு உதைக்கிறாங்கலே....
அம்மா சீரியல் பாக்கேக்க
அடம்பிடிச்சு சனல் மாத்திபபாத்த
கிரிக்கட்டை கூட பாக்க விருப்பமில்லை
சேவாக் பந்தை சிக்ஸ்சருக்கு அடிக்கேக்க
எண்ட மனம் பதைபதைக்குது,
இந்தப் பந்து மாதிரி தான் எங்களையும்
பூமிப் பந்தில இருந்து தூக்கி எறிஞ்சிடுவங்களோ எண்டு....
சரி இரவாச்சு படுப்பமேண்டு
கண் மூடித் தூங்கினாலும்
கண்றாவி இந்தக் கனவு கூட
விடுகுதில்லையே!!!!!!!!!!!!
உலகம் அறியுமோ எம்மன ஆவலை??
தக்கைகள் அறியுமோ நீரின் ஆழத்தை????
Wednesday, August 26, 2009
விடியும் திசை(படித்ததில் பிடித்தது )
என் ஊருக்கு
நீண்ட நாட்களின் பின்
என் பயணம்
புழுதி படிந்த பாதை
என் ஊருக்கு
வழி காட்டியது
தெருவோரம்
படுத்திருந்த நாய்
மௌனத்தால்
அமைதி காத்தது
வரும் காலம் என்னை
புது முகமாய்ப் பார்த்தது
விழுது பரப்பிய
ஆலமரம் மட்டும்
அறிமுகமாய் சலசலத்தது
அகல விரிந்த
கல்லறைகள்
நிறைந்த வெளி
என் உறவுகளின்
இருப்பிடம் அது
என்பதை உணர்த்தியது.
அறிமுகமானவர்களை
தேடினேன் எவரும் இல்லை
அறிமுகத்துக்காகத் தேடினேன்
அதற்கும் யாரும் இல்லை
என் ஊருக்குள்
தடம் பதித்த என்
காலச் சுவடுகள்
காற்றால்
அழிக்கப் பட்டுக்கெண்டிருந்தன
குருதி படிந்து என்
நிலம் மட்டும்
நிறம் மாறி இருந்தது
என்னை அடையாளம் காண
எவரும் இருக்கவில்லை
தனிமையில் என் கால்கள்
ஊருக்கு விடை கெடுத்தன
ஊர் எல்லையில் சலசலத்த
ஆலமரம் மட்டும்
என் கால்களைத்
தடுத்தது நான் வந்த
பாதை மட்டும் அமைதியாய்
உறங்கிக் கெண்டிருந்தது
விம்மிய மனம் ஊருக்கு
விடை கெடுத்தது
பயணத்தின் இடையில்
வழி மறித்தது ஒரு கை
அடையாளத்துக்காய்
முகம் நோக்கினேன்.
தழும்புகள் அடையாளம்
மறைத்தது சிரிப்பு மட்டும்
என் இளமைக் காலத்தை
நினைவூட்டியது
குரல் அடையாளம் காட்டியது
அவன் என் நன்பன்
மீண்டும் என் இளமை
எனக்குச் சொந்தமனது
வெட்ட வெளிச்சம்....
அதனால் வரும்
இரத்தம் என்றால் என்ன?
இழப்பது என்றால் என்ன?
அதனை பின்பு
சகிப்பது என்றால் என்ன?
வேதனை என்றால் என்ன?
அதன் உச்சக்கடமாகிய
விரக்தி என்றால் என்ன?
இலட்சியம் என்றால் என்ன?
அதனை அடையக் கொண்ட
கொள்கை என்றால் என்ன?
பொறுப்பு என்றால் என்ன?
அதை விடுத்துச் செய்யும்
துரோகம் என்றால் என்ன?
பொறுமை என்றால் என்ன?
நாம் செய்யவேண்டிய
கடமை என்றால் என்ன?
பிறப்பு என்றால் என்ன?
ஈற்றில் வரும்
இறப்பு என்றால் என்னவென
அறிந்தவர்கள் எம்மக்கள்
அர்த்தத்தின் தாக்கங்களினை
அளவுகடந்தே அனுபவித்தவர்கள்
இன்றும் கூட அனுபவித்து கொண்டிருப்பவகள்
மனச்சாட்சியை தொலைத்துவிட்டு
இல்லையில்லை புதைத்துவிட்டு
மௌனமாக நிற்கும் சர்வதேசத்திற்கே
சவால் விடக் கூடிய சக்கரவர்த்திகள்!
அகிம்சை என்று வேஷம் போடும்
அண்டை நாட்டிற்கு - அதன்
அர்த்தத்தை கற்பிக்கக்கூடிய அறிவாளிகள்!!
அவர்களும் பரந்த இப்பாரினிலே
வாழவென படைக்கப்பட்ட ஜீவன்கள்தான்
காலத்தின் கோலத்தால்,
கடவுள்கள் கபடி விளையாடும்
கந்தக பூமியிலே அவதரித்து விட்டார்கள்!!!
படைப்பவனுக்கும், அழிப்பவனுக்கும்
இடையில் நடக்கும் பந்தயத்திலே
பலிக்கடாவாக்கப்பட்டு விட்டார்கள்!!!!
இடையே தன்னிருப்பை காட்டவென
காப்பவனும் களத்திலே குதித்ததன்
விளைவு?
முத்தரப்பு போட்டியாய் இன்று
விஸ்தரித்து நிற்கின்றது.
சல்பரும் காபனும்
சங்கமமான காற்று!
பொட்டாசியமும் பொஸ்பரசும்
புதைந்து போன மண்!!
நைதரசனாலும் குளோரினாலும்
நனைந்து விட்ட நீரென!!!
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள
அத்தனை மூலகங்களும்
அங்கே ஆஜராகி உள்ளன.
இத்தனை சோதனைக்குள்ளிருந்தும்
சாதனை படைக்கவென ஏங்கி நிற்கின்றார்கள்..
எஞ்சி நிற்கும் மூலகமான
"தோரியத்தை" கொண்டுவந்து
கொட்டினாலன்றி - இவர்கள்
வீரியத்தை அடக்க வேறொன்றும்
இல்லையென்பது வெட்ட வெளிச்சம்....