'சிவராத்திரி - ஒரு சிறப்பு ரீவைண்ட்' எழுதேக்க எனக்கு ஒரு ஐடியாவும் இருக்கேல்ல. சும்மா எழுதுவம் எண்டு தொடங்கினது, எங்க தொடக்கி எங்க முடிக்க எண்டு தெரியாம எதோ கிறுக்கு பிடிச்சு கிறுக்கினது. அதுக்கு ஒரு நாலு 'லைக்' விழுந்தவுடன, கிறுக்கு பிடிச்ச எனக்கு தொடர்ந்து கிறுக்க பிடிச்சிருக்கு. இனி இதை வாசிச்சு கிறுக்கு பிடிக்க போகுதோ தெரியேல்ல. அப்பிடி ஏதும் அசம்பாவிதம் நடந்தால் அதுக்கு கம்பனி பொறுப்பில்லை. ( எதுக்கும் ஒரு safety pre caution ஐ குடுத்திட்டால் நாம safe . இல்லாடில் மனவுளைச்சல் வந்திட்டு ,அது இது எண்டு லயபிளிட்டி இன்சூரன்ஸ் claim வந்தால் நான் எங்க போய் என்ட தலையை அடகு வைக்கிறது? ( ஆர்ரா அவன் உங்க "உன்ட தலையை அடகுவைச்சால் மட்டும் என்னவோ கிடைக்கவே போகுது" எண்டு சௌண்டு விடுறது ?))
அன்பே சிவம் படத்தை பாத்து தான் பாலாக்கு ' நான் கடவுள்' எடுக்கிற ஐடியா வந்ததாம். அதைப்போல தான் எனக்கும், இதை எழுதிறத்துக்கு ஐடியா தந்தது சில பல ப்ளொக்ஸ். இப்ப தான் ஒண்டு ஞாபகத்துக்கு வருது.ஒருக்கா நான் டோக்கரிட்ட போகேக்க கேட்டன், " டொக்டர் எனக்கு அடிக்கடி 'ஒண்டுக்கு' வருது, ஏதும் டியாபெடீஸ் இருக்குமோ ?" எண்டு. அந்தாள் சொன்னார், தம்பி கண்டபடி தண்ணி குடிச்சால் அது போகத்தானே வேணும். ( அந்த மனுஷன்'உண்மையான தண்ணிய' தான் சொன்னவர்). அதே தியரி தான் இங்கயும் அப்பளை ஆகுது .கண்ட படி வாசிச்சால் கொஞ்சமாவது எழுத தோன்றும் தானே. அதுக்கு நாங்களா வாயச்சம் உண்ட கிறுக்கலை வாசிக்க எண்டு கேட்டிட்டு இதோட விட்டிட்டு எழும்ப கூடாது. பழகின குற்றத்துக்காக ப்ளீஸ் ! கீழ ஸ்குரோல் பண்ணி வாசிச்சு முடியுங்க.
நாங்களும் சங்க காலத்தில வாழ்ந்த ஆட்கள் தான். சங்கம் என்ன, சங்கமருவிய காலத்திலயும் வாழ்ந்திருக்கிறம். என்னடா இவன் பினாத்திறான் எண்டு நெனைக்கப்படாது.
அதாகப்பட்டது குடும்ப அட்டையை கொண்டு போய் லைனில நிண்டு பத்துக்கிலோ கோதம்பமா, ஐஞ்சு கிலோ அரிசி, ரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் இன்னும் பல ஐட்டங்கள் எண்டு கூப்பனுக்கு சங்கக் கடையில வாங்கின காலம் தான் எனக்கு தெரிஞ்ச 'சங்க காலம்'. அந்த நேரத்தில சங்கக் கடை மனேச்சர்மாருக்கு ஊரில செம மரியாதை. சொல்லப்போனால் அவையள் தெய்வங்கள் மாதிரி. ஏன் சேல்ஸ்மனுக்கு மட்டும் என்ன குறைச்சலாம்? அவையும் பெரும் ஆக்கள். தெரிஞ்சவை வந்தால் கொஞ்சம் கூடப் போட்டு குடுப்பினை. தெரியாத சனங்கள், இல்லை எண்டால் வேண்டாத சனங்கள் வந்தால் துலைஞ்சுது. குடுத்த ஐஞ்சு கிலோ அரிசியை நிறுத்தால் நாலு கிலோ தேறுமோ எண்டது கேள்வி குறி? தட்டிக்கேக்க ஆருக்கு தெம்பு இருக்கு. கிடைச்சவரை லாபம் எண்டு பேசாமபோடுங்கள் அப்பாவி ஜீவன்கள். கப்பல் பருத்தித்துறைக்கு வந்தால் தான் இவைக்கு வேலை, இல்லாட்டில் சும்மா போய் ஒரு சைன போட்டிட்டு வீட்ட போடுவினை. இவை தான் சங்க கால ஹீரோக்கள்.
இந்த கொடுமை எல்லாம் இல்லாமல் போய், அன்னை நாக பூட் சிட்டி எல்லாம் யாழ்ப்பணத்தில திறக்க வெளிக்கிட்ட காலம் 'சங்கமருவிய' காலம். இந்தக்காலத்தில எல்லாருமே ஹீரோக்கள் தான்.
இப்பிடி இலக்கியத்தில வாற மாதிரி காலங்கள் இருந்தால், அதே இலக்கியத்தில வாற மாதிரி காதலும் வீரமும் இருக்க தானே வேணும். காதலும் வீரமும் எந்தக்காலத்திலையும் தமிழரை விட்டு மட்டுமில்ல தமிழ் படங்கள்ல இருந்தும் அழிக்க முடியாது. லவ் சீன், பைட் சீன் இல்லாத எந்த தமிழ் படம் ஐஞ்சு நாள் தாண்டி ஓடியிருக்கு சொல்லுங்க பாப்பம்?
' ஆனையை அடக்கிய அரியாத்தை' எண்டு ஓரள் இருந்தவா சங்ககாலத்தில எண்டு பெண்ணின் வீரத்தை கதைச்சால், இப்ப 'ஆணையே அடக்கிற பல அரிய ஆத்தைகள்' இருக்கினம். காதலை பத்தி சொல்ல எனக்கு தகுதி இல்லை. அதைப்பத்தி அண்ணன் 'JK ' படலையில பொழிஞ்சு தள்ளுறார். ஆர் இந்த JK எண்டு அங்கலாய்க்கிறவைக்கு ஒரு சின்ன intro.
********************
அண்ணன் ஒரு அறிவுக்கஜானா . எந்த பிச்சிலையும் அடிச்சு ஆடுவார். பௌன்ஸ் எண்டாலும் சிம்பிளா ஹூக் ஷோட்ல வெளுத்திடுவார். துஸ்ரா எண்டாலும் பொறுமையா டிபென்ஸ் பண்ணிடுவார். என்ன கார் ட்ரக் மாறி போகுது போல. இப்பிடியே போனால் JK இக்கு வாளி வைக்கிறான் எண்டு நெனைக்க போறாங்கள. So நீங்களே அவர்ட blog க்கு போய் வாசிச்சு பாத்து முடிவெடுங்கோ.
**********************
(அடே நீ என்ன தான் சொல்ல வாறாய் எண்டு உங்க கன பேர் சொல்லுறது எனக்கும் கேக்குது பாருங்கோ)
இது சங்கத்துக்கும் சங்கம் அருவினதுக்கும் இடைப்பட்ட காலம். யாரெல்லாம் நாட்டுக்க வரக்கூடதேண்டு ஊரடங்கு போட்டிருந்திச்சினமோ அவையளே நாட்டுக்குள்ள சுதந்திரமாய் வந்து போக அனுமதிச்சிருந்த காலம். ( 'அவையள்' ஆர் எண்டு விசர்த்தனமாய் கேட்டியள் எண்டால் , இதோட இப்பிடியே ஓடி போங்கோ). அப்பத்தான் நாங்கள் A/L படிக்க வெளிக்கிட்ட நேரம். அந்த நேரத்தில maths படிக்க வெளிக்கிட்டவன் எல்லாம் Engineer. Bio படிச்சவங்கள் எல்லாம் Doctor. ஆண்டு பதினொண்டில ஒருக்கால் maths இக்கு 97 எடுத்த அசட்டு தைரியத்தில எடுத்தால் A/L ல maths தான் படிக்கிறது எண்டு வரிஞ்சு கட்டிக்கொண்டு வெளிக்கிட்டாச்சு. கிருஷ்ணன் கீதைல சொன்ன மாதிரி ' விதியது வலியது' எண்டு அப்ப விளங்கேல்ல.
"தம்பி படிக்கிறான் இல்லை. இப்பவும் முந்தி மாதிரியே உவங்களோட திரியுறான். எங்க போறாய் எண்டு கேட்டால் 'உதில தான்' எண்டு மொட்டையா சொல்லிட்டு போறான். இவனை என்ன எண்டு நீங்க தான் கேளுங்கோ .. பாளிமேன்டில அம்மா மனு தாக்கல் செய்யிறா.
நான் நினைச்சன் இண்டைக்கு என்ட கதை சரி போல கிடக்கு எண்டு.
"O/L வரைக்கும் bat டும் ball லுமா ஊரைச்சுத்திகிட்டு இருந்த பயலுகள், ஸ்டார் ல கிரிகெட் டீம் தொடங்க போறாங்களாம் என்ட உடன ஓடிபோய் முன்னுக்கு நிண்ட பயளுக்கள்ள முக்கால்வாசி என்ன, முழுத்தும் நம்ம பசங்க தான். அப்பிடி திரிஞ்சவங்கள உடன எல்லாத்தையும் விட்டிட்டு A/l படிக்க வா எண்டால் எப்பிடி வருவான். அந்த பய மெள்ள மெள்ள தான் படிப்பான்."
அப்பர் இப்பிடி எனக்காக ஒரு ஸ்ட்ரோங் ஒப்ஜெச்சன் குடுப்பார் எண்டு கனவிலையும் நான் நெனைச்சு பாக்கேல்ல. இந்தாள் என்னடா என்னைய இப்பிடி நம்புது! நான் கூட என்னை இவளவு நம்பினதில்லையே எண்டு யோசிச்சு கொண்டிருக்க ,
விட்டாவோ அம்மா .." மெள்ள மெள்ள எண்டா எவ்வளவு மெள்ளவா? அதுக்க ஏப்ரல் வந்திடும்".
அம்மா பாயிண்ட் பாயிண்ட் ஆ எடுத்து விட்டா
அதுக்கு தானே இருக்கு, second shy, third shy..
அப்பத் தான் என்ட மரமண்டைக்கு விளங்கிச்சு அப்பர் என்னை 'கலாய்க்கிறார்' எண்டு.
சொன்னதும் பத்தாம அப்பர்என்னை பாத்தார். இதுக்கு மேல அவரால வாதட ஏலாது எண்டு எனக்கும் தெரியும். ( இப்ப விளங்குதோ ஏன் நான் ' ஆனையை அடக்கின அரியாத்தைய ' இதுக்க இழுத்தனான் எண்டு)
இனி நான் தான் பதில் சொல்லோனும் .. வேற வழி இல்லை.
மெல்லாம சொன்னன், combine study பண்ணினால் தான் சரிவரும் போல கிடக்கு. எனக்கு chemistry ஓட்டெல்ல. பெடியளோட சேர்ந்து படிச்சால் டௌட்ட கிளியர் பண்ணலாம் எண்டு.
(அது சரி தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் எண்டு யோசிக்கிறிங்களா?
stay tuned )
No comments:
Post a Comment