Saturday, March 22, 2014

எதுவும் சாத்தியம் இங்கே!!

வெற்றி இலக்கு 210, 45வது ஓவரின் ஆரம்பத்தில் ஓட்ட எண்ணிக்கை 5 விக்கட் இழப்புக்கு 200. வெற்றிக்குத் தேவை வெறும் பத்து ரன்களே! துடுப்பெடுத்தாடிக் கொண்டிருப்பது பொல்லக், மறுமுனையில் கல்லீஸ். ஆரைக்கேட்டாலும் கண்ண மூடிக்கொண்டு அடுத்த ஒவரோட அலுவல் முடிஞ்சிடும் எண்டு தான் சொல்லுவினம். ஏன் கிரிக்கட்டுக்கு ஒரு கொம்பிளிக்கேட்டட் விதி வரைந்த டக்வேர்த், லூயிஸ் கூட கனவிலையும் நெச்சுப்பாத்திராயினம் இப்பிடி ஒரு அசம்பாவிதம் நிகழும் என்று.

45வது ஓவர், இரண்டாவது பந்து. மலிங்க போட்ட பந்தை லாவகமாக மிட்விக்கட்டுக்கு மேலால் அனுப்பிவிட்டிந்தார் பொல்லக். விளைவு பௌன்றி. அடுத்தது டொட் போல். அடுத்தது டபுள். ஐஞ்சாவது போல்; அது தான் சௌத்அவ்ரிக்காவுக்கு எமகண்டம் தொடங்கிய சுபமுகூர்த்தம். Change of space , almost a Yorker. எங்கட லோக்கல் லாங்குவிச்சில சொன்னால் 'idea ball'. பொல்லக்கின் பொல்லு பறந்திச்சு. மலிங்கா சின்னதா கொடுப்புக்க ஒரு சிரிப்பு. அவ்வளவு தான் செலிபிறேசன். இன்னும் நாலு ரன்ஸ் அடிச்சால் வின். அங்கால கல்லீஸ் வேற நட்டமரம் மாதிரி நிக்கிறான். ஆர்ப்பாட்டம் பண்ண ஆருக்கு தான் மனசு வரும். இதுவே 'விராத் ஹோலி' எண்டால் குதிச்சு , கும்மாளம் போட்டு , அவுட்டானவனை பாத்து முறாய்ச்சு ஒரு வழி பண்ணியிருப்பான். அது வேற கதை. ஒவரின் கடைசிப் பந்து, உள்ள வந்தது அன்ரூ ஹோல். திருப்பியும் ஒரு slow ball. Front foot la போய் defence பண்ண பாத்திருப்பார் எண்டு நினைக்கிறன். கஷ்டகாலம். பந்து பட்டில பட்டு எகிறி நேர தரங்கவிடம் சரண்டரானது. 200/5 என்று ஆரம்பித்த ஓவர் 206/7 இல முடிஞ்சுது.

அடுத்த ஓவர் வாஸ். வாஸுக்கும் கல்லீஸுக்கும் வாஸ்து பிரச்சினை போல. முதல் போல்லயே சிங்கிள் எடுத்திட்டு சிங்கம் அங்கால பம்மீட்டுது. புதுசா வந்த பீட்டர்சன் பாவம் என்ன பண்ணும்?மிச்சம் ஐஞ்சு போலையும் கிஸ் பண்ணிப்போட்டு நிண்டிடும்.

46வது ஓவர், சிங்கனுக்கு முதல் போல்ல விக்கட் எடுத்தால் முதலாவது ஹட்ரிக். ஆன ஆங்கலா நிக்கிறதும் ஒரு சிங்கம். அதுவும் 86 ரன்னோட. சும்மாவே தேவையில்லாச் சோலிக்கு போகமாட்டான், இப்ப ஹட்ரிக் சான்ஸ் வேற. ரெஸ்ட் மட்ச் வழிய off stumps க்கு வெளியில பந்து வந்தா தொடவே மாட்டான். இரண்டு கையையும் bat ஓட சேர்த்து மேல தூக்கி ஒரு கும்பிடு. அவ்வளவு தான். பந்து நெஞ்சுக்கு வந்தால் back foot, stumps க்கு வந்தால் front foot. (அப்ப குஞ்சுக்கு வந்தால் என்ன செய்யிறது எண்டு குசும்புத்தனமா கேக்கப்படாது!) Jaffna Hindu la 'ரவுண்ட்ஸ்' coach பண்ணேக்க சொன்ன தியரியை அப்பிடியே அட்சரம் பிசகாமல் அப்பிளை பண்ணுவான் பாவி. ஆயிரத்து சொச்ச நிமிசம் தொடர்ந்து not out ல நிண்டு அடிச்சதாக சின்னதா ஒரு ஞாபகம். அதால மலிங்காவுக்கே பெரிசா நம்பிக்கையில்லை. இருந்தாலும் பந்து போடவேண்டியது தொழில் தர்மம். ஓடிவந்து 'டிஸ்கஸ்' எறியுமாப்போல போட்டான் ஒரு பந்து.  நல்ல லெந்தில விழுந்த பந்து. கல்லீஸ் ஏன் அதுக்கு 'கவர் ரைவ்' அடிக்க ரைபண்ணீனான் எண்டு இண்டு வரைக்கும் டவுட் எனக்கு. அங்கஜனைக்கேட்டால், "அவனுக்கு ஒண்டுக்கு போற அவசரமாயிந்திருக்கும், விடு மச்சான்" என்பான்.

"Sangakkaara making no mistakes, Malinga is creating history out here" என்று commentator உச்சஸ்தாயியில் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருந்தார். கல்லீஸ் சுத்தி முத்தி பாத்துக்கொண்டிருந்தார். பாவம் ஒருநாளும் அலாப்பல் விளையாட்டு விளையாடுறேல்ல. ஹீ இஸ் எ பக்கா ஜென்டில்மேன் , யூ நோ? கிளீன் அவுட்டுக்கு தானாகவே வெளிநடப்பு செய்திடுவார். இண்டைக்கு அண்ணருக்கு ஒரு சின்ன டவுட். மலிங்க சும்மா துள்ளிக் குதிக்க Daryl Harper விரலத் தூக்க (நடுவிரல இல்லயப்பா, சுண்டுவிரலத் தான் காட்டினவர் Harper) நடையைக் கட்டினார் 'விஸ்வாசயின் தருவ' ஐக் கல்லீஸ்.

மலிங்கவிற்கு முதல் ஹட்ரிக். மட்ச் மாறிப்போச்சு. அடுத்ததாக வந்த அப்பக்கோப்பை 'நிட்டினி'. 2006 இல SSC யில சங்காவும் மஹலவும் நிண்டு சதிராடி ரேக்கோட் பிறேக்கிங் பார்ட்னசிப் போடேக்க, லோங்கோன்ல நிண்ட 'நிட்டினிக்கு' நானும் அங்கஜனும் சேர்ந்து கடுப்பேத்த, ஆள் கடுப்பாகி "கரிப் புக்கை" எண்டு பேசினது இப்பவும் நினைவிருக்கு. (நிட்டினிக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச சிங்களச்
சொற்களில் இதுதான் அதிகப்படியான பாவனையில் உள்ளதாம்.) நிட்டினிக்கும் பட்டிங்கும் பூர்வ ஜென்ம பகை எண்டு நினைக்கிறன். மலிங்க போட்டான் ஒரு perfect Yorker, கிளைமோரில அம்பிட்ட டக்டர் மாதிரி பிரிஞ்சு கிடந்தது stumps. வந்த முதல் போல்லயே அண்ணர் டக்கவுட். நாலு ஓவர்ல்ல எல்லாம் தலைகீழாப்போச்சு. 200/5 எங்க ? 207/9 எங்க? நடக்கிற காரியமா இது?

சிறீலங்காவால தான் இப்பிடி 'மெடிக்கல் மிராக்கிள்' குடுக்க முடியும். ஒருக்கால் ஷார்ஜாவில இந்தியாவோட 299 அடிச்சிட்டு அவங்களை 54 க்குள்ள all out ஆக்கினது அந்த நேரத்தில ரெக்கோட். ( இதை விபூசண் வாசிச்சிட்டு கடுப்பாகி என்னை 'கருணா குழு' எண்டு சொன்னாலும் சொல்லுவான்.) சரி விசயத்துக்கு வருவம். அடுத்த இரண்டொரு பந்தில சோலியை முடிச்சிடுவாங்கள் எண்டு பாத்துக்கொண்டிருக்க ஒரு ரன்ன ஓடீட்டு பிச்சோட படுத்திட்டாங்கள் பாவிப்பசங்க. அடுத்த ஓவரும் லங்கவ்வெல்ட் ( படுபாவியின்ட பேர் வாய்க்க மட்டுமில்ல எழுத்துக்கயும் உள்ளடுதில்ல) பசைய வாஸ் வெறுத்திட்டான். 49வது ஓவர், பீற்றர்சன், முதல்போல் ஸ்விங் பண்ணி மிஸ். பாத்த எல்லாரும் கண்டிப்பா 'உச்சு' கொட்டியிருப்பினம். பீற்றர்சனுக்கு சிலநேரம் 'உச்சாவே' போயிருத்திருக்கும். அடுத்த போல், lower full toss எண்டு நினைவிருக்கு. பீற்றர்சன் லைட்டா தட்ட edge ஆகி ஸ்லிப்பில நிண்ட சீமான் மிஸ் பண்ண பந்து third man ஐத்தாண்ட, எல்லாம் ஓவர். அந்த கட்சை மட்டும் பிடிச்சிருந்தால் வரலாற்று மகத்துவமான வெற்றியாக இருந்திருக்கும். ஜஸ்ட்டு மிஸ்!! வெற்றி தோல்வி எல்லாம் முக்கியமல்ல. வெற்றிக்காக எடுத்த முயற்சிதான் சுவாரஸ்யம். எத்தினை காலத்துக்கு தான் 'மியாண்டாட்' லாஸ்ட் ஓவர் லாஸ்ட் போல் சிக்ஸர் அடிச்சதை சொல்லிக்கொண்டே திரியிறது.

இன்றைக்கு நடந்த T20 இல ஆரம்பத்தில சிறீலங்கா தோக்கும் போல இருந்தத  பாத்திட்டு சில 'ஆர்வ கோளாறு பேர்வழிகள்' அவசரப்பட்டு அறிக்கை விட்டிட்டினம். அன்பான அடியார்களே! அவசரம் வேண்டாம்!!! என்னதான் சொன்னாலும் இன்றுவரை T20 ranking கில சிறீலங்கா தான் முதல் இடம். இதை ஒத்துக்கொள்ள நான் கட்டாயம் சிறீலங்கன் பானா (fan) இருக்க வேண்டிய அவசியமில்லை. கிரிக்கட்டில கடைசி ஓவர்ல கூட ஜாதகம் மாறலாம். 

No comments:

Post a Comment